கனேடிய மாகாணம் ஒன்றில் சுரங்கத்துக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு: மக்கள் மகிழ்ச்சி

Balamanuvelan
Report this article
வடக்கு ஒன்ராறியோவில் சுரங்கம் ஒன்றிற்குள் சிக்கிய 39 சுரங்கப் பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
Sudburyக்கு அருகிலுள்ள அந்த சுரங்கத்தை நிர்வகிக்கும் நிறுவனமான Vale, மீட்புப்பணி நிறைவுபெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த சுரங்க ஊழியர்கள் தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டார்கள்.
பல ஏணிகளை சேர்த்துவைத்து சுரங்கத்திலிருந்து மேலேறிய அவர்கள், மீட்புக்குழுவினரும் உதவியதைத் தொடர்ந்து பத்திரமாக சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.
திங்கட்கிழமை இரவு அந்த மீட்புப் பணி தொடங்கியது. கடைசி ஊழியர் புதனன்று அதிகாலை 4.45 மணியளவில் மீட்கப்பட்டார்.
தற்போது அந்த 30 ஊழியர்களும் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் உற்சாகக்குரல் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.