நடுகடலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; அமெரிக்காவில் யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?
அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் மற்றும் அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸின் திருமணம், ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை உல்லாச கப்பலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனரும், உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பீசோஸ், அவரது அவரது காதலி லாரன் சான்ச்சேஸ், திருமண விழா ஜூன் 26 முதல் 29 திகதி வரை நடைபெறவுள்ளது.
திருமணம், இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் ஒரு சொகுசு கப்பலில் நடத்த திட்டமிட்டபட்டுள்ளது. திருமணத்துக்கு வி.ஐ.பி.க்கள் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர், உள்ளிட்ட பிரபலங்கள் பங்குபற்றவுள்ளனர்.
அதேநேரத்தில் பிரபலங்களின் வருகை குடிமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எந்த இடையூறும் இருக்காது என வெனிஸ் நகர மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறியுள்ளார்.