கதவு அடித்துக் கொள்ளாமல் இருக்க ஆம்பர் (amber) கல்லை வைத்த மூதாட்டி
ரொமேனியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிலுள்ள கதவு அடித்துச் சாதிக்கொள்ளாமல் இருக்க அணைவாக ஆம்பர் (amber) பயன்படுத்தி வந்துள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
3.5 கிலோகிராம் எடை கொண்ட சிவப்பு நிறத்திலுள்ள அந்த ஆம்பர் (amber) கல் கடற்கரையோரமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
ரொமேனியாவில் ஆம்பர் சுரங்கங்கள்
அது ஆம்பர் (amber) என அறியாத மூதாட்டி கதவுக்கு அணைவாக வைக்கப் பயன்படுத்தலாம் என்று மூதாட்டி எடுத்துவந்தார்.
ரொமேனியாவில் பல ஆம்பர் சுரங்கங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆம்பர் தோண்டி எடுக்கப்படுகிறது. எனினும் கல்லை வைத்திருந்த மூதாட்டிக்கு அதன் மதிப்புத் தெரியவில்லை.
அவர் 1991ஆம் ஆண்டு இறந்தபின் அவரது உறவினர் ஒருவர் அந்தக் கல்லின் மதிப்பறிந்து அதை அரசாங்கத்துக்கு விற்றார்.
குறித்த ஆம்பர் (amber) கல்லின் வயது 38 மில்லியனிலிருந்து 70 மில்லியனாக இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இப்போது அந்தக் ஆம்பர் (amber) கல் தேசியப் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. தேசிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.