தன்பாலின திருமணத்திற்கு அமெரிக்கா அங்கீகாரம்!
தன்பாலின திருமண அங்கீகாரத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற கவலைகளை போக்கும் விதமாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதர்கு கூட்டாட்சி பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் ஒரே பாலின திருமணங்கள் மற்றும் ஓரின விருப்பம் கொண்டவர்களின் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்.
நாட்டின் ஒரு மாகணத்தில் செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களும் அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 47 குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் இந்த மசோதா பெற்றது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அவையில் இருந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கைதட்டி மசோதாவை வரவேற்றனர்.
100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில், ஜனநாயகக் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். 67 க்கு 157 வாக்குகள் மூலம், திருமணத்திற்கான மரியாதை சட்டம் (The Respect for Marriage Act ) அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் செனட்டில் இந்த மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறினால் தான் மக்களுக்கு மசோதாவினால் பயன் ஏற்படும். அரசியல் காரணங்களுக்காக இரு அவைகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் போவதால், மிகப் பெரிய பிரச்சனைகளும் தீர்வு காண முடியாமல் நிலுவையில் இருக்கும் நிலை ஏற்படும்.
இந்த சட்டம் 1996 ஆம் ஆண்டு திருமண பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்கிறது, இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இணைவே திருமணம் என்று கூறுவது.
ஓரினச்சேர்க்கை தம்பதிகள் திருமணம் செய்துக் கொண்டாலும், அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கு இந்த சட்டம் தடையாக இருந்தது, உச்ச நீதிமன்றத்தால் 2013 இல் 5-4 முடிவில் ரத்து செய்யப்பட்ட போதிலும், அந்த சட்டம் நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.