அமெரிக்காவில் வரலாறு காணாத வறட்சி
அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் லாசு வேகாசில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது மீடு ஏரி. இது கொலராடோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. கொலராடோ ஆற்றின் போக்கைத் தடுப்பதால் ஏற்பட்ட இந்த ஏரி அணைக்குப் பின் 111 மைல்கள் நீளத்திற்குப் பரந்துள்ளது.
இந்த ஏரி நீரானது நெவாடா, தென் கலிபோர்னியாவின் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து அதை ஒரு தேசிய வறட்சி பேரிடராக அறிவித்து சிறப்பு நிதி ஒதுக்குமாறு 10 மாநில ஆளுநர்கள் அதிபர் ஜோ பைடனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வறட்சியால் ஒட்டுமொத்த பயிர்களும் கருகுவதுடன், விளைச்சல் குறைந்து பயிரை அழிக்கும் பூச்சிகள் அதிகரிக்கும் என அவர்கள் பைடனுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மீட் நீர்த்தேக்கத்தில் இருப்பு அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளதால் அரிசோனா, நெவாடா, மெக்சிகோ ஆகியவற்றுக்கான நீர்ப்பகிர்வு குறையும். லாஸ் ஏஞ்சலஸ், சான்டியாகோ, போனிக்ஸ், டஸ்கான் மற்றும் லாஸ் வேகாஸ் ஆகிய நகரங்களில் உள்ள 2.5 கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மீட் நீர்த்தேக்கம் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது