அமெரிக்காவில் மீன் உணவை சாப்பிட்ட குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
அமெரிக்காவில் திலாப்பியா மீன் உணவை சாப்பிட்ட தாயார் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கை, கால்கள் துண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலைமை மிக ஆபத்தான பாக்டீரியாவால் மாசுபட்ட திலாப்பியா மீன் உணவை சாப்பிட்டதால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரா பராஜாஸ். இவரே வியாழக்கிழமை உயிர் காக்கும் அறுவைசிகிச்சைக்கு உள்ளானார்.
சுமார் ஒரு மாத காலம் சிகிச்சைக்கு பின்னர், வைத்தியர்கள் இந்த முடிவுக்கு வந்திருந்தனர்.
உள்ளூர் சந்தை ஒன்றிலிருந்து திலாப்பியா மீனை லாரா பராஜாஸ் வாங்கியுள்ளார். அந்த உணவை சமைத்து சாப்பிட்ட நிலையிலேயே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மிக ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாராவுக்கு கோமா நிலையில் சிகிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கை விரல்கள், கால் பாதங்கள், கீழ் உதடு என மொத்தமும் கறுத்துப் போனது. அவரது சிறுநீரகமும் செயலிழந்து வந்தது.
இது தொடர்பில் மருத்துவர்கள் தெரிவிக்கையில்,
Vibrio Vulnificus என்ற கொடியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மீனை அவர் உட்கொண்டுள்ளார். இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, காயங்களுடன், இந்த பாக்டீரியா காணப்படும் கடல் நீரில் குளித்தாலும், உயிருக்கு ஆபத்து தான் என கூறுகின்றனர்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை இந்த பாக்டீரியா பலவீனமாக்கும் எனவும் ஆண்டுக்கு 150 முதல் 200 பேர்கள் வரையில் இந்த பாக்டீரியா பாதிப்பால் சிகிச்சை பெறுவதாகவும், இதில் ஐந்தில் ஒருவர் மரணமடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.