கிரீன்லாந்தை கைப்பற்ற கனவு காணாதீர்கள்; டிரம்ப் மீது டென்மார்க் பிரதமர் சீற்றம்!
கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள் என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார்.
மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை.
அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பாதிக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது.
அதேசமயம், வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதன் ஆதிக்க மனப்பான்மை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.