பத்து ஆப்கான் சிறுமிகளைக் காப்பாற்றிய அமெரிக்க தாய்

girls america mom afghan rescued
By Praveen Aug 24, 2021 12:23 AM GMT
Praveen

Praveen

Report

ஆப்கானிஸ்தானில் இருந்து 10 பெண்களை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.

தாய்மை என்பது தனது குழந்தைகளின் நலனை மட்டும் வேண்டுவதல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் அமெரிக்க அன்னை ஒருவர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டை சேர்ந்த பெண்களின் பாதுகாப்பு பற்றி உலகமே கவலைப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள 10 இளம் பெண்களை காப்பாற்றியிருக்கிறார் இந்த 60 வயது அமெரிக்கப் பெண்மணி.

ஆப்கன் பெண்கள் ரோபாட்டிக்ஸ் குழுவின் 10 உறுப்பினர்களை மீட்ட இந்த அமெரிக்க பெண்ணை தற்போது உலகமே சூப்பர் ஹீரோவாக பார்க்கிறது. தலிபான்கள் நாட்டின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு பிரபலமான பெண் ரோபோடிக்ஸ் குழுவைச் சேர்ந்த 10 பேரை மீட்டார் இந்த பெண். அவர்களை காபூலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினார் 60 வயது அல்லிசன் ரெனோ (Allyson Reneau). 11 குழந்தைகளின் தாயான இவருக்கு 9 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஹார்வர்ட் பட்டதாரியான ரெனோ, ஆப்கானிஸ்தானில் பதற்றம் அதிகரித்தபோது, அங்குள்ள பெண்களின் நல்வாழ்வு குறித்து கவலைப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னதாக, 2019 ஹியூமன் டு மார்ஸ் மாநாட்டில் ரோபாட்டிக்ஸ் குழுவினரை சந்தித்த ரெனோ, தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியின் உதவியுடன் 10 சிறுமிகளையும் குழந்தைகளை வெளியேற்றுவதற்கு தேவையான ஆவணப் பணிகளை செய்துக் கொடுத்தார். பிறகு கத்தார் அரசு ஒரு விமானத்தை அனுப்பி சிறுமிகளை வெளியே அனுப்பியது. ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்த செய்திகளுக்கு மத்தியில் இந்த செய்தி ஒரு ஆறுதல் தரும் செய்தியாக நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்துகிறது.

இறுதியாக, 10 பெண்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறி வெற்றிகரமாக நாட்டை விட்டு வெளியேறினார்கள். இப்போது நாட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்தச் சிறுமிகள் அங்கிருந்து தங்கள் கல்வியைத் தொடரவுள்ளனர். ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தாலிபன்களின் கிளர்ச்சி நடவடிக்கைகளில் அவர்களின் முன்னேற்றமும், அந்நாட்டு ராணுவத்தின் பின்னடவையும் பார்த்த ரெனோ, சிறுமிகள் ஆபத்தில் உள்ளனர் என்று புரிந்துக் கொண்டார்.

எப்படியாவது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியை தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். ரெனோவின் தோழியின் உதவியுடன் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, ஆப்கன் பெண்களை பத்திரமாக காபூலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையைத் தொடங்கினார்.

"அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கிக் கொண்டு, நள்ளிரவில் தூதரகத்திற்குச் சென்று, இரவு முழுவதும் வேலை செய்து, பெண்களை நாட்டை விட்டு அழைத்துச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் முன்னேற்பாடுகளை எனது தோழி தயாரித்தாள்" என்று ரெனோ கூறினார். இந்த செய்தியை பகிரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரெனோ, ஆனால் இரண்டாவது குழு பெண்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

தற்போது, அனைவரின் உதவியுடன் ரோபோடிக்ஸ் அணியில் உள்ள 25 சிறுமிகளையும் அவர்களின் வழிகாட்டிகளையும் வெளியேற்றும் நடைமுறையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். "ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து பெண்கள் ஆப்கானிஸ்தான் ரோபாட்டிக்ஸ் குழுவின் பல உறுப்பினர்கள் பாதுகாப்பாக வந்துள்ளனர்" என்று டிஜிட்டல் சிட்டிசன் ஃபண்ட் மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஆப்கானிஸ்தான் பெண்கள் ரோபோடிக் குழு பற்றி கூறியது. மீட்புக்கு முன்பு ரெனோ இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி அனைவரையும் கேட்டுக் கொண்டார் ரெனோ.

"நான் பொதுவாக உதவி கேட்க விரும்புவதில்லை, ஆனால் தயவுசெய்து இந்த ஆப்கான் பெண்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் அதிகம் சொல்ல முடியாது, ஆனால் அவர்களுக்கு இப்போது ஏதாவது ஒரு அதிசயம் நடக்கவேண்டும்" என்று அந்தப் பதிவில் கேட்டுக் கொண்டார் ரெனோ.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US