இந்தியாவில் முச்சக்கர வண்டியை ஓட்டி செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்!
டெல்லியில் அமெரிக்க பெண் தூதர்கள் புல்லட் கவச காருக்கு பதிலாக முச்சக்கர வண்டியை ஓட்டி பணிக்கு செல்கின்றனர்.
இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் உள்ளன. அவற்றில் அந்நாட்டு தூதர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த 4 பெண் தூதர்கள் டெல்லியில் உள்ள தூதரகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஆன் எல் மேசன், ரூத் ஹோம்பெர்க், ஷரீன் ஜே கிட்டர்மேன் மற்றும் ஜெனிபர் பைவாட்டர்ஸ் ஆகியோரே அந்த 4 அமெரிக்க பெண் தூதர்கள் ஆவர்.
குறித்த 4 அமெரிக்க பெண் தூதர்கள் துப்பாக்கி குண்டுகள் (புல்லட்) துளைக்காத கவச வாகனங்களில் செல்வதற்கு பதிலாக ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்வதிலேயே விருப்பம் கொண்டுள்ளனர்.
இதற்காக தனியாக முச்சக்கர வண்டியை வாங்கி வைத்து உள்ளனர். அவற்றிலேயே 4 தூதர்களும் பணிக்கு செல்கின்றனர்.
இதுதவிர, பணி நிமித்தம் எங்கேனும் செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் கருப்பு மற்றும் பிங்க் வண்ணம் கொண்ட முச்சக்கர வண்டியிலேயே பயணம் மேற்கொள்கின்றனர்.
அவர்களே முச்சக்கர வண்டி ஓட்டியும் செல்கின்றனர் என்பது கூடுதல் அம்சம். அப்படி என்ன அதில் விருப்பம் உள்ளது என்பதற்கு அவர்களே விளக்கமும் அளித்துள்ளனர்.
அது, வெளியே போகும்போது, சுதந்திரம் ஆக பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர்.