இறந்த குழந்தையுடன் போராடும் அமெரிக்க தம்பதி; காரணம் என்ன தெரியுமா?

Sulokshi
Report this article
அமெரிக்க மருத்துவமனை ஒன்று தங்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி, தங்கள் குழந்தை தங்களுக்கு வேண்டும் என உயிரிழந்த குழந்தையுடன் ஒரு தம்பதியர் போராடி வருகிறார்கள் .
Mario Barrales என்பவர் தன் மனைவியான Guadalupe Vélezஐ லாஸ் ஏஞ்சல்சிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதித்த நிலையில் , குழந்தையை வெளியே எடுத்து சென்ற செவிலியர் ஒருவர் தங்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குழந்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அது தங்கள் குழந்தையல்ல என்பது தெளிவாக தெரிந்ததாக Guadalupe தெரிவிக்கிறார். அந்த குழந்தையின் தோல் நிறம், தொப்புளின் அமைப்பு மற்றும் உடல் வடிவம் ஆகியவை வித்தியாசமாக இருந்ததாகவும் அது தன் குழந்தையல்ல எனவும் Guadalupe, கூறுகின்றார். அந்த குழந்தை ஐந்து நாட்களில் உயிரிழந்த நிலையில் நுரையீரல் மற்றும் மூளையில் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் , தன் ஆரோக்கியமான குழந்தையை வேறொருவரிடம் கொடுத்துவிட்டு, நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையை தன்னிடம் மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்துவிட்டதாக Guadalupe குற்றம் சுமத்தியுள்ளார். அதற்கு ஆதாரமாக தன் குழந்தை பிறந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமின்றி வேறு சில ஆதாரங்களையும் Guadalupe காட்டுகிறார்.
ஒரு நாள் தன் உறவினர்கள் தன் குழந்தையைப் பார்க்க வந்ததாகவும், அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் வேறொரு அறைக்கு அனுப்பிவிட்டதாகவும், அந்த அறையிலும் Guadalupe என்ற பெயரில் ஒரு பெண் இருந்ததாகவும், அவருக்கும் ஒரு குழந்தை பிறந்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் Guadalupe, அத்துடன், இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்றும் , ஆஸ்துமாவுக்கான இன்ஹேலர் ஒன்றை அவருக்கு கொடுத்திருக்கிறார் ஒரு செவிலியர், அது எதற்கு என்று கேட்டால், உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருக்கிறதல்லாவா அதற்குத்தான் என அந்த செவிலியர் கூறியிருக்கிறார் .
Guadalupeக்கு ஆஸ்துமா பிரச்சினையே இல்லை. அடுத்தபடியாக, உங்கள் குழந்தை இறந்ததற்கு காரணம், நீங்கள் போதைப்பொருள் அருந்துபவர் என்பதால்தான் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் Guadalupe போதைப்பொருளை தொட்டுப் பார்த்தது கூட கிடையாதாம் என கூறும் அவர், Guadalupe என்ற பெயரில் உள்ள மற்றொரு பெண்ணிடம் தன் குழந்தையை செவிலியர்கள் தவறுதலாக கொடுத்துவிட்டார்கள் என Barralesம் Guadalupe வும் கூறுகின்றனர்.
அத்துடன் DNA சோதனை செய்யலாம் என்றால், DNA மாதிரி எடுக்க மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கவேயில்லையாம் எனவும் கூறப்படுகின்றது.
ஆங்கிலமும் தெரியாமல், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சட்டத்தரணிகள் தங்கள் வழக்கை எடுக்கவும் முன்வராததால் Barralesம் Guadalupeவும் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.