விபத்தில் சிக்கிய அமெரிக்க ஹெலிகொப்டர் ; நால்வர் பலி
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேக்ரமெண்டோவுக்கு வடமேற்கே 70 மைல் தொலைவில் உள்ள கொலூசா என்ற சிறிய நகரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரோபின்சன் ஆர் 66 என்ற ஹெலிகொப்டரே விபத்துக்குள்ளானதாக அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்துடன் விபத்து குறித்து விசாரணை செய்யும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையகம் கூறியுள்ளது.
எனினும் இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இன்னும் வெளியாவில்லை.