இரண்டே நாளில் 75 படுகொலைகள்: மிரண்டு போன அரசாங்கம் அதிரடி முடிவு
எல் சால்வடோர் நாட்டில் குழுக்களுக்கு இடையேயான மோதலில் இரண்டே நாட்களில் 75 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்தே எல் சால்வடோர் நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக காணப்படாத சம்பவமாக எல் சால்வடோர் நாட்டில் வெள்ளிக்கிழமை 14 பேர்கள் கொல்லப்பட, அடுத்த நாள் சனிக்கிழமை மொத்தமாக 62 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் பிப்ரவரி மாதத்தில் மட்டும் எல் சால்வடோர் நாட்டில் 79 பேர்கள் மட்டுமே மொத்தமாக பலியாகியுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலேயே நாட்டின் ஜனாதிபதி Nayib Bukele நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, படுகொலைகளில் தொடர்புடையதாக கூறப்படும் குழுக்களின் தலைவர்கள் 5 பேர்களை சிறை பிடித்துள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.