சாரதியின் அனுபவமின்மை காரணமாக நிகழ்ந்த விபத்து: கனடாவில் ஒரு துயர சம்பவம்
அபினவ் (Abhinav) என்பவர் மனித்தோபாவில் ட்ரக் ஒன்றை செலுத்திக்கொண்டிருக்கும்போது, முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார்.
அந்த விபத்தில், காரில் பயணித்த ஒன்ராறியோவைச் சேர்ந்த Mark Lugli (54) என்பவரும், அவரது மகனான Jacob Lugli (17) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
அபினவுக்கு 3,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஓட்டுவதற்கு நான்கு மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழக்குகளில் அதிகபட்ச தண்டனையாக 5,000 டொலர்கள் அபராதமும், ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
ஆனால், அபினவ் விடயத்தில் அரசு வழக்கறிஞர்கள் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கும்படி நீதிமன்றத்தைக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.