பாரிஸ் நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
பாரிஸ் நகரம் முதல் குப்பை சேகரிப்பாளர்கள் மற்றும் நாட்காட்டிகளின் விற்பனையாளர்களிடம் அவதானமாக இருக்குமாறும் பாரிஸ் நகர சபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் புத்தாண்டினை முன்னிட்டு நாட்காட்டிகளை விற்பனை செய்வதற்கு நகர சபை தடை விதித்துள்ளதனை மக்களுக்கு நினைவுகூரப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் பாரிஸ் நகரம் முழுவதும் போலி குப்பை சேகரிப்பாளர்கள் வீடுகளுக்கு வருவதாகவும் அவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் எனவும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நகர சபையினால் டுவிட்டர் பதிவொன்று பதிவிடப்பட்டு இந்த எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் “போலி குப்பை சேகரிப்பவர்களிடம் ஜாக்கிரதை!” ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில், பாரிஸ் நகரத்தில், நகர சபை முகவர்கள் என கூறுபவர்களால் நாட்காட்டிகளை விற்கவோ அல்லது வீட்டில் பரிசுகளைக் கேட்கவோ முடியாது என்பதை நினைவூட்டுகிறோம். சிலர் மக்களை ஏமாறும் நடைமுறையை முன்னெடுத்துள்ளனர். அவதானம்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி குப்பை சேகரிப்பவர்கள் தற்போது வீடு வீடாகச் சென்று நாட்காட்டிகளை விற்பது போல் நடிக்கின்றனர். அவர்கள் பாரிஸ் நகரின் முகவர்கள் அல்ல மோசடியாளர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர சபை முகவர்கள் இந்த வகையான நடைமுறையைப் பின்பற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு வருபவர்களிடம் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் பணிக்காக வந்ததாக கூறி மக்களை ஏமாற்றி பணம் அல்லது பொருட்களை கொள்ளையிடுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
சந்தேகமான யாராவது கதவை தட்டினால் கதவை திறக்க வேண்டாம் என பொத மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.