எலான் மஸ்க்கால் கோடீஸ்வரராகும் இந்தியர்
கர்சரின் தாய் நிறுவனமான ‘எனிஸ்பியரை’ 60 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கவுள்ள நிலையில், கர்சர் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி இளைஞன் கோடீஸ்வரராகின்றார்.
கர்சர் என்பது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கோடிங் தளமாகும். புரோகிராமர்கள் தங்களது திட்டங்களுக்கான குறியீடுகளை (code) ஏஐ மூலம் எழுத இந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கர்சருடன் கூட்டு சேர்ந்தது. தனது ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க கர்சரின் கம்ப்யூட்டிங் வளங்களை ஸ்பேஸ் எக்ஸ் பயன்படுத்தியது.
தற்போது கர்சரின் தாய் நிறுவனமான ‘எனிஸ்பியரை’ 60 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்குகிறார். இதன் மூலம் கர்சர் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி இளைஞர் அமன் சாங்கருக்கு 2.7 பில்லியன் டாலர் கிடைக்கும். அதேபோல் இதன் பங்குதாரர்களில் ஒருவரான பாகிஸ்தான் இளைஞர் சுலேஹ் ஆசிப்புக்கும் (28) கிடைக்கவுள்ளது.
அமன் சாங்கர் (25) அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அமனின் தந்தை அரவிந்த் சாங்கர் மும்பை ஐஐடி.யின் முன்னாள் மாணவர். அமனின் தாய் ஷில்பா சாங்கர் பல் மருத்துவர்.
அ மன் மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் (எம்ஐடி) சுலேஹ் ஆசிப், ட்ரூயல் மற்றும் லுன்னெமார்க் ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்களைச் சந்தித்தார், பின்னர் அவர்களுடன் இணைந்து கர்சர் நிறுவனத்தை 2022-ல் தொடங்கினார்.