அமெரிக்காவில் இந்திய மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் வசித்த இந்திய மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிய நிலையில் அமெரிக்காவின் அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார்.
பொலிசார் விசாரணை
அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், மருத்துவ சிகிச்சையில் 38 வருட அனுபவம் கொண்டவர் ஆவார்.
இந்நிலையில் குறித்த மருத்துவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். டஸ்கலூசா நகரில், இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவரின் கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை கொரோனா காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காப்பாற்றி சேவை செய்ததுடன் இதற்காக ஏராளமான விருதுகளும் அவர் பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.