பிரித்தானியாவில் மாணவர் விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு!

United Kingdom
By Sundaresan May 25, 2023 11:51 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற கடுமையான திட்டங்களின் ஒரு பகுதியாகவே மாணவர் விசா மீதும் கடும் போக்கைக் கடைப்பிடிக்க பிரதமர் ரிஷி சுனாக்கின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாணவர் விசா தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (23.05.23 வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை அழைத்து அவர்களோடு இணைந்து கொள்வதை (family reunification for foreign students) பெருமளவில் கட்டுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே மாணவர் விசாவைத் (student visa) தொழில் விசாவாக (work visa) மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வெகு விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிகளை அனுப்பிவைப்பதற்கான ஒரு பயண வழியாக மாணவர் விசாவைப் பயன்படுத்துகின்ற சர்வதேச முகவர்களை இது கட்டுப்படுத்தும் என பிரித்தானிய குடிவரவு குடியகல்வுத் துறை கருதுகிறது.

மாணவர் விசாவின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைகின்ற வாய்ப்பைக் குறைப்பதன் மூலம் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கின்ற குடியேறிகளின் நிகர எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க புதிய விதிகள் உதவும் என பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மாணவர் விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு! | Announcement About Student Visa In Britain

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வரவுள்ள இந்தக் கட்டுப்பாடு பட்டப்படிப்புக்குப் பிந்திய ஆராய்ச்சிகளில்(postgraduate researchers) ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டு மாணவர்களுக்குப் பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இணைந்து கல்வி கற்பதற்காக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாணவர் விசா வசதிகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.

இதில் பிரித்தானியாவில் குடியேற விரும்புபவர்களும் மாணவர் விசா வசதியைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர் நிலையில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு விசா வழங்கப்பட்டிருப்பது பிரித்தானியாவின் குடிவரவு – குடியகல்வுப் பிரிவின் பதிவுகளில் தெரியவந்துள்ளது. 2019 இல் இந்த எண்ணிக்கை வெறும் 19 ஆயிரமாகவே இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US