நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண் அறிவிப்பு
நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை ஜோ பைடன் நியமித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு பெரும் பங்கு அளித்து வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்க அரசின் பல்வேறு அதிகாரமிக்க பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர்.
இதன்படி அந்த வரிசையில் நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை ஜோ பைடன் நியமித்துள்ளார். அவர் காஷ்மீரில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரும், அமெரிக்காவின் பிரபல அரசியல் செயற்பாட்டாளருமான ஷெபாலி ரஸ்தான் துகல் ஆவார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “2 பிள்ளைகளுக்கு தாயான துகல், அனுபவம் வாய்ந்த அரசியல் செயற்பாட்டாளர், பெண்கள் உரிமைகளுக்கான வக்கீல் மற்றும் மனித உரிமை ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவர்.
இவர் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.