ரஷ்யாவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!
ரஷ்ய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோஸ்மாஸ். அதன் புதிய தலைவராக யூரி போரிசோவ்(Yuri Borisov) இந்த மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்டார்.
அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை(Vladimir Putin) நேற்று சந்தித்தார். அப்போது போரிசோவ் (Yuri Borisov) கூறுகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா 2024-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா சார்பில் தனி விண்வெளி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் சொந்த விண்வெளி நிலையம் கட்டப்பட்டு செயல்படும் வரை ரஷ்ய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை பயன்படுத்துவார்கள் என அமெரிக்க விண்வெளி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அமெரிக்காவுடன் ரஷ்யா தனது விண்வெளி கூட்டுறவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாசாவின் விண்வெளி செயல்பாட்டுத் தலைவர் கேத்தி லூடர்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.