கத்தாரில் கால்பந்து போட்டிக்கு நடுவில் கலக்கும் மற்றுமொரு போட்டி!
கத்தாரில் ஒருபுறம் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறும் வேளையில், மறுபுறம் ஒட்டகங்களுக்காகவே அழகுப் போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது.
Qatar Camel Mzayen Club நடத்தும் அழகுப் போட்டியில் பங்கெடுக்கும் ஒட்டகங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து வருவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த போட்டியில் ஒட்டகங்கள் பல்வேறு விதங்களில் மதிப்பிடப்படுகின்றன. வயதுவாரியாகவும் இனவாரியாகவும் போட்டி நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
போட்டியை நடத்துபவர்கள் அது முறையாக நடத்தப்படவேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக உரிமையாளர்கள் சிலர் ஒட்டகங்களை ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு அனுப்புகின்றனர்.
அது போன்ற முறைகேடு நடக்காமல் இருக்க, ஒட்டகங்கள் x-ray செய்யப்படுகின்றன.
மேலும் ஒப்பனை அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அழகுப் போட்டியின் வெற்றியாளர் ஒட்டகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.