தலிபான்களின் மற்றுமொரு பெண்களுக்கு எதிரான வில்லங்கமான சட்டம்
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களின் புதிய சட்டத்தின்படி கணவர் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம் என கூறியுளளது.
ஆப்கானிஸ்தானில் பின்பற்றப்படும் சட்டங்கள் மிகவும் கடுமையானது. அதுவும் பெண்களுக்கு எதிரான அங்கு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. பெண்கள் முகத்தை காட்டக்கூடாது கல்வி கற்கக் கூடாது என்றெல்லாம் அங்கே சட்டம் இருக்கிறது.

தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம்
ஏனெனில் அங்கு தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில்தான், தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் ஆப்கான் பெண்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
புதிய சட்டத்தின்படி கணவர் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம். ஆனால் எலும்புகள் உடையாமல் இருக்க வேண்டும் அல்லது கடுமையான காயங்கள் ஏற்படாமல் அடிக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே கணவருக்கு தண்டனை கிடைக்கும்.
மேலும், பெண்களை பாதுகாக்கும் முந்தைய சட்டங்களையும் தற்போது தாலிபன் அரசு ரத்து செய்திருக்கிறது.
அதாவது ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கி எலும்பை உடைத்தாலோ அல்லது காயத்தை ஏற்படுத்தினாலோ கணவருக்கு 15 நாட்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
அவ்வளவுதான் அதேபோல் கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தனது உறவினர்களை பார்க்கச் சென்றால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைதண்டனை வழங்கப்படும் என சட்டம் கொண்டு வந்துள்ளமை உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்நிலையில் தலிபான்கனின் இந்த புதிய சட்டங்கள் தொடர்பில், சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஆப்கானிய மனித உரிமை அமைப்பு கோரிகை வைத்திருக்கிறது.