ஸ்பெயினில் மீண்டும் ஒரு ரயில் விபத்து
ஸ்பெயினில் (Spain) தண்டவாளம் மீது ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். பார்சிலோனா (Barcelona) நகர் அருகே நடந்த சம்பவத்தில் 15 பேர் காயமுற்றனர்.
அதேவேளை இதற்கு முன், ஞாயிற்றுக்கிழமை (18 ஜனவரி) நாட்டின் தெற்குப் பகுதியில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

அந்தச் சம்பவத்தில் இடிபாடுகளிலிருந்து மேலும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42க்கு அதிகரித்தது.
இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய முழு விசாரணை நடத்தப்படும் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் (Pedro Sanchez) உறுதிகூறினார்.
அதேவேளை சதிநாச வேலை ஏதும் நடக்கவில்லை என்று நாட்டின் உள்துறை அமைச்சர் சொன்னார். ரயில் விபத்தை அடுத்து ஸ்பெயினில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.