இலங்கை இராணுவத்தை பலவீனப்படுத்துவதில் இரகசிய நகர்வு! அமெரிக்க புலனாய்வு பல மில்லியன் முதலீடு
இந்தியா சொல்வதை போல இலங்கைக்கு இராணுவம் தேவையா என்ற நிலையை தான் கொண்டு வரப்போகிறார்கள் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்குள் தமது படைத்தரப்பை கொண்டு வர தான் அமெரிக்கா முற்படுகிறது. அமெரிக்காவின் 3 உடன்பாடுகளும் அமெரிக்க படையின் பிரசன்னத்திற்கு உரிய புறச்சூழலை உருவாக்குபவை.
இந்தியாவும் இலங்கைக்கு உதவிகளை செய்தது, இலங்கையுடன் நட்புறவுகளை பேணியது, இலங்கையுடன் இணைந்து செயற்படுகிறது என்று கூறினாலும் இறுதியாக அவர்கள் எடுத்த ஆயுதம் படைத்தரப்பு.
அமெரிக்காவின் CIA கூட பெருமளவான அமைப்புகளுக்கு உதவிகளை செய்கிறார்கள். இவ்வாறு வழங்கப்படும் பணம் எதிர்க்கட்சிகளுக்கும், றோ அமைப்புக்களுக்கும் வழங்கப்படுகிறது.
பணம் கொடுப்பது யாரென்று பார்த்தால், அமெரிக்க அரசாங்கம் கொடுக்கவில்லை. கொடுக்கிறவர்கள் புலனாய்வு துறையினர் என குறிப்பிட்டுள்ளார்.