கனடாவில் தகாத செயலில் ஈடுபட்ட படைவீரர் கைது
கனடாவில் விணிபெக் நகரில் உள்ள கனடிய ஆயுதப்படை முகாமில் சேவை புரிந்து வந்த 31 வயதுடைய ஒரு படைவீரர், சிறுவர் பாலியல் தொடர்பான பல குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம், சமூக ஊடகங்களில் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை உள்ளடக்கிய காணொளிகள் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து விசாரணை செய்த பொலிசார், விணிபெக் நகரில் உள்ள சந்தேக நபரை அடையாளம் கண்டறிந்தனர்.
மேலும் விசாரணையில், 2018 மே முதல் 2019 ஏப்ரல் வரை, குற்றம் சாட்டப்பட்ட நபர், தமக்குத் தெரிந்த ஒரு குழந்தையை அநாகரீகமாக புகைப்படங்களை எடுத்ததும், அதை இணையத்தில் பகிர்ந்ததும் தெரியவந்தது.
விணிபெக் நகர பொலிஸாரும் இராணுவ பொலிஸாரும் இணைந்து, கனடிய ஆயுதப்படை முகாமில் சோதனை நடத்தி, சந்தேகநபரை கைது செய்தனர்.
மேலும் 2020-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தக் குழந்தையை பாலியல் செயல்களில் ஈடுபட வலியுறுத்தியதையும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.