கனடிய பிரதமர் கார்னி சீனாவிற்கு விஜயம் கனடா பிரதமர் மார்க் கார்னி
அடுத்த வாரம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் (PMO) உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெறவுள்ள இந்தப் பயணம், வர்த்தகம், எரிசக்தி, விவசாயம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒட்டாவா – பெய்ஜிங் இடையிலான ஒத்துழைப்பை மேலும் உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணம், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவிற்கு செல்லும் கனடா பிரதமரின் முதல் அதிகாரப்பூர்வ பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த காலங்களில் சில முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சீனாவை கனடா விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.