பிரான்சில் மருத்துவமனைக்கு செல்ல ஜனாதிபதியின் பாஸை பயன்படுத்திய இளைஞர் கைது
மருத்துவமனைக்கு செல்ல இளைஞர் ஒருவர் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் சுகாதார பாஸை பயன்படுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் மருத்துவமனைக்கு செல்ல pass sanitaire கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மார்செயில் என்னும் இ வயது இளைஞன் ஒருவன் இந்த செயலி ஈடுபட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை மார்செ 9 ஆம் வட்டாரத்தில் உள்ள Sainte-Marguerite மருத்துவமனைக்கு இளைஞன் ஒருவன் வருகை தந்துள்ளான்.
அந்த சமயத்தில் அவனிடம் சுகாதார பாஸ் உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அந்த இளைஞன் தன்னிடம் சுகாதார பாஸ் இல்லையென்றும் ஆனால் அதற்கான QR குறியீடு வைத்திருப்பதாக தெரிவித்தான்.
பின்னர் அந்த குறியீட்டை பரிசோதனை செய்ததில் அது ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பாஸ் என தெரியவந்தது .
பின்னர் கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் தான் விளையாட்டாக இதை செய்ததாக கூறியுள்ளான்.
அண்மையில் ஜனாதிபதி மக்ரோனின் சுகாதார பாசில் உள்ள QR குறியீடு இணையத்தில் கசிந்து பரபரப்பகியிருந்தது. அச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.