பிராம்டனில் வாகன தரிப்பிடத்தில் தாக்குதல்: ஓருவர் பலி
ஒன்டாரியோ மாகாணம் பிராம்டனில், வாகன நிறுத்துமிடத்தில் நடந்த தாக்குதலில் 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை தகவலின்படி, காஸில்மோர் ரோடு மற்றும் மெக்வீன் டிரைவ் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், பாதிக்கப்பட்ட இளைஞரும் சந்தேகநபரும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி, பாதிக்கப்பட்டவர் தாக்குதலுக்கு உள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஜனவரி 20 அன்று ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
விசாரணையாளர்கள் அந்த நபரை அப்திபதா அகமது (Abdifatah Ahmed) என அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்மீது மனிதக் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக தகவல் உள்ளவர்கள், பீல் பிராந்திய காவல்துறையின் கொலை விசாரணைப் பிரிவை 905-453-2121 (ext. 3205) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.