கனடாவில் திரைப்பட குழுவினரின் ட்ரோன் விமானம் மீது தாக்குதல்
ரொறன்ரோவில் திரைப்பட குழுவினரின் ட்ரோன் விமானம் மீது இருவர் அம்புகளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
துன்டாஸ் தெரு கிழக்கு மற்றும் கிரீன்வுட் அவென்யூ பகுதியில் திரைப்படம் ஒன்று படமாக்கப்படும் இடத்திற்கு அருகில் காலை 9:22 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
திரைப்பட குழுவினரின் ட்ரோன் விமானம் மீது குடியிருப்பு ஒன்றின் மொட்டைமாடியில் இருந்து ஒருவர் அம்புகளால் தாக்குதல் நடத்தியதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது திரைப்பட குழுவினருக்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் ஆபத்தாக முடிய வாய்ப்பிருப்பதாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து திரைப்பட குழுவினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசார், சம்பவத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பாக Michael Jung(51) மற்றும் Guymond Jung(55) ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அம்பால் தாக்குதலுக்கு இலக்கான ட்ரோன் சேதமடைந்ததா என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.