கனடாவில் தீ விபத்தில் 11 வயது சிறுமி பலி:கொலையா என விசாரணை
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் உள்ள ரிச்ச்மண்ட் ஹில்லில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
தீவிபத்தில் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கொலை என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி அதிகாலை 3 மணியளிவில் ஸ்கைவுட் டிரைவ் பகுதியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வீட்டினுள் சிக்கியிருந்த நால்வரும், வெளியே கிடந்த ஒருவரும் மீட்கப்பட்டனர். அனைவரும் மிகக் கடுமையான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.