அமெரிக்கத் தூதுவரை விமர்சனம் செய்த டக் ஃபோர்ட்
அமெரிக்க தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா (Pete Hoekstra) கனடாவின் வாஷிங்டன் பிரதிநிதி டேவிட் பேட்டர்சனிடம் (David Paterson) மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிகளுக்கு எதிரான தொலைக்காட்சி விளம்பரத்தை (anti-tariff TV ad) கடுமையாக விமர்சித்த ஹூக்ஸ்ட்ரா, பேட்டர்சனை ஒரு நிகழ்வில் மரியாதையற்ற வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
ஹூக்ஸ்ட்ராவின் நடத்தை முற்றிலும் ஏற்க முடியாதது; அது தூதருக்கு ஏற்ற நடத்தை அல்ல என தெரிவித்துள்ளார்.

ஃபோர்ட் நகைச்சுவையான முறையில் தூதுவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஒன்டாரியோ அரசு வெளியிட்ட அந்த விளம்பரத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் (Ronald Reagan) சுதந்திர வர்த்தகத்தை ஆதரிக்கும் உரை இடம்பெற்றது.
இதனால் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த விளம்பரத்திற்குப் பிறகு டிரம்ப், கனடாவுடன் நடந்துவரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை திடீரென நிறுத்தி, கனடிய பொருட்களுக்கு கூடுதல் 10% சுங்க வரி விதிப்பதாக எச்சரித்திருந்தார்.