கனேடிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பாப்பரசர்
கனடாவின் பழங்குடியின மக்களிடம் புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க தேவாலயங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கூறியுள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த வதிவிட பாடசாலைகளில் பழங்குடியின சமூகத்தினரை இன சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட தாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கோரவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வமான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் முதல் கட்டமாக இந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோருவதாகவும் பாப்பரசர் பழங்குடியின மக்களிடம் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்கள் ஒடுக்கப்பட்டமைக்காக மிகவும் வருந்துவதாகவும் அவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் பாபரசர் தெரிவித்துள்ளார்.
பாப்பாண்டவர் தனது உரையினை தனது தாய் மொழியான பிரெஞ்சு ஸ்பெயின் மொழியில் ஆற்றியதுடன் அது ஆங்கில மொழியிலும் பழங்குடியின மக்களின் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1880 ஆம் ஆண்டு முதல் 1900 வரையிலும் இந்த பதிவிட பாடசாலைகள் கனடாவில் இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கோருவதற்கு முன்னதாக பாப்பாண்டவர் வதிவிட பாடசாலை சிறார்கள் புதைக்கப்பட்ட புதைகுழி என சந்தேகிக்கும் இடம் ஒன்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது