நோபல் அட்டக்களைக்கு எதிராக முறைப்பாடு செய்த ஜூலியன் அசாஞ்சே
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கோரினா மச்சாடோவுக்கு நோபல் அமைதி பரிசு வழங்கியதை எதிர்த்து, ஸ்வீடனில் உள்ள நோபல் அறக்கட்டளை மீது முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த ஆண்டு மச்சாடோவுக்கு பரிசு வழங்கப்பட்டது, நிதி முறைகேடு மற்றும் ஸ்வீடிஷ் சட்டப்படி "போர் குற்றங்களை எளிதாக்குதல்" என அசாஞ்சே குற்றம்சாட்டியுள்ளார்.
அவர், 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (1.18 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பரிசுத்தொகையை மச்சாடோவுக்கு மாற்றுவதை தடுக்கவும் முயல்கிறார்.

நோபல் குழு, அக்டோபரில் மச்சாடோவுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்திற்கு போராடியதற்காகவும் இந்த பரிசை வழங்கியது.
புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அசாஞ்சேவின் குற்றப்புகாரில், நோபல் அறக்கட்டளையின் தலைமை உட்பட 30 நபர்கள் மீது நிதி முறைகேடு, போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை எளிதாக்குதல், மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களுக்கு நிதியளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மச்சாடோவுக்கு பரிசு வழங்குவதன் மூலம், "அமைதியின் கருவி" ஒரு "போரின் கருவியாக" மாற்றப்பட்டதாக அசாஞ்சே தனது புகாரில் குறிப்பிட்டார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகச் செய்ய அமெரிக்கா இராணுவ அழுத்தம் கொடுக்கும் நிலையில், மச்சாடோ "சர்வதேச குற்றங்களை" தூண்டுவதாகவும் ஆதரிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சர்ச்சைக்குரிய தேர்வு மச்சாடோவின் நோபல் பரிசு தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை அவர் வெளிப்படையாக ஆதரித்ததும், அவரது நோபல் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதும் விமர்சனங்களை பெற்றது.
மேலும், ஆட்சிக்கு வந்தால் வெனிசுலாவின் இஸ்ரேல் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக அவர் உறுதியளித்தார்.
இவ்வாறான பின்னணியில் நோபல் பரிசு வழங்கப்பட்டமையை எதிர்த்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.