நண்பனின் மறைவிற்கு உருகி இரங்கல் வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர்
ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஸின்ஷோ அபே கொலை செய்யப்பட்ட சமபவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அபேவின் மரணத்தினால் கனடா நல்லதொரு நண்பனை இழந்து விட்டது என அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அபே பிரச்சாரமொன்றில் பங்குபற்றி உரையாற்றிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கனடாவில் மிக நீண்ட காலம் பிரதரமர் பதவி வகித்தவராக அபே கருதப்படுகின்றார்.
நல்ல சிந்தனைகள் உடைய நல்லதொரு நண்பனை இழந்து விட்டது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நண்பனின் பிரிவு வருத்தமளிப்பதாக ஜஸ்ரின் ட்ரூடோ தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேவும், கனேடிய பிரதமர் ட்ரூடோவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.