கனடவில் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பு
கனடா அரசு அட்லாண்டிக் மாகாணங்களில் கப்பல் கட்டணங்களை பாதியாகக் குறைத்ததன் பின்னர், அப்பகுதியிலுள்ள கப்பல் சேவைகள் பயணிகள் மற்றும் முன்பதிவுகளில் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 25 வரை, செயிண்ட் ஜான் மற்றும் டிக்பி (Digby, N.S.) இடையே பயணித்த பயணிகள் 34% அதிகரித்துள்ளதுடன், வாகன போக்குவரத்து 39% உயர்ந்துள்ளதாக பே ஃபெர்ரிஸ் (Bay Ferries) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜூலை 28 அன்று பிரதமர் மார்க் கார்னி, பிரின்ஸ் எட்வர்ட் தீவு (P.E.I.) இணைக்கும் கொன்படரேஷன் பிரிட்ஜ் கட்டணத்தை $50-இலிருந்து $20 ஆகக் குறைத்ததுடன், அட்லாண்டிக் மாகாணங்களுக்கான மத்திய அரசாங்க ஆதரவு பெற்ற கப்பல் கட்டணங்களையும் 50% குறைத்தார்.
அந்த நேரத்தில் இது ஆண்டுக்கு சுமார் $100 மில்லியன் செலவாகும் என கணிக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்து அதிகரிக்கும் என அரசு எதிர்பார்த்தது.