இங்கிலாந்தில் பேருந்துக்காக நின்ற இந்திய பெண் ; காத்திருந்த பயங்கரம்!
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே (வயது 66). இவர் தேசிய சுகாதார சேவையில் மருத்துவ செயலாளராக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.
இவர் வடமேற்கு லண்டனில் உள்ள எட்க்வேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியால் அனிதாவை சரமாரியாக குத்தினார்.
சம்பவத்தில் மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட அனிதா பரிதாபமாக உயிரிழந்த நிலையில் உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்த நிலையில் , அவர் 22 வயதான ஜலால் டெபெல்லா என்பது தெரிய வந்தது.
அவர் எதற்காக இந்திய பெண்ணை கொலை செய்தார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது மரணம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என உயிரிழந்த பெண்னின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.