டொரான்டோ கிருஷ்ணர் கோயில் மீது தாக்குதல்; சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியானது
கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலை சேதப்படுத்தியவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகிக்கப்படும் இரு ஆண்கள் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக, அருகிலிருந்த மதுக்கூடத்துக்கு சென்றது தெரிய வந்ததுள்ளது. அவர்கள் கோயிலின் நுழைவாயிலில் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இருப்பினும், அவர்கள் முகத்தை மறைக்கும்வகையிலான ஹூடி (Hoodie) அணிந்திருந்ததால், அவர்களின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றத்துடன் செயல்படும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் ஹிந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஹிந்து கனேடிய அறக்கட்டளை, ஹிந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல், பல்வேறு சமூகங்களின் நல்லிணக்கத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் சுட்டிக்காட்டியுள்ளது.