வெனிசுலா மீது தாக்குதல்; ஐ.நா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்நாட்டின் வான்வெளியில் வெடிப்புகள், உரத்த சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவின் மீது தாக்குதல் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா. கூட்டத்திற்கு உடனடியாக அழைப்பு
அண்டை நாடான கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro), வெனிசுலா தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இப்போது அவர்கள் கராகஸ் (Caracas) மீது குண்டு வீசுகிறார்கள், ஏவுகணைகளால் குண்டு வீசுகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்திற்கு உடனடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
CBS செய்திகள் ட்ரம்ப் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக செய்தி வெளியிட்ட சில மணிநேரங்களில் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என குறிப்பித்தக்கது.