ஈரானில் உள்ள 6,000 இலக்குகள் மீது தாக்குதல்கள் ; அமெரிக்காவின் அதிலடி தகவல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள 'எபிக் ஃபியூரி' இராணுவ நடவடிக்கையின் கீழ், ஈரானில் உள்ள 6,000 இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
சுமார் 60 ஈரானியக் கப்பல்கள் மற்றும் 30 ஏனைய சிறிய ரகப் படகுகள் இந்தத் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈரானிய இராணுவ மையங்கள், ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் பெலிஸ்டிக் ஏவுகணை மையங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் என்பனவற்றையும் இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை ஒருபுறம் இருக்க ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.