சிட்னியில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை தீயிட்டு எரிக்க முயற்சி
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை தீ மூட்டி எரிகக முயன்ற சம்பவத்திற்கு யூதர்கள் எதிர்ப்பே காரணம் என சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிட்னியின் கிழக்கில் யூதவழிபாட்டுதலம் பாடசாலைகளிற்கு நடுவில் அமைந்திருந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சிலர் தீயிட்டு எரிக்க முயற்சித்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையம் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது எனினும் எவரும் பாதிக்கப்படவில்லை.
அந்த கட்டிடம் மீது யூதஎதிர்ப்பு வாசகங்களை இனந்தெரியாதவர்கள் எழுதிவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிட்னியில் ஒருவாரகாலத்திற்கு யூதர்களிற்கு சொந்தமான கட்டிடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது ஆகும்.
அதேவேளை 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.