ஆங் சான் சூகியின் தண்டனை குறைப்பு
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் இருந்து ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, ஆங் சான் சூகியின் 33 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்படும். கடந்த வாரம், ஆங் சான் சூகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தலைநகர் நேபி தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆட்சிக்கவிழ்ப்பு
நோபல் பரிசு பெற்ற 78 வயதான ஆங் சான் சூகி, ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், பெப்ரவரி 2021 முதல் இராணுவத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆட்சிக்கவிழ்ப்பு நாட்டில் உள்நாட்டுப் போரைத் தூண்டியது, ஆயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது. இராணுவ ஆட்சிக்குழு தனது ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஆங் சான் சூகிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அந்நாட்டு இராணுவம் தலைமையிலான விசாரணையில் விசாரிக்கப்பட்ட பின்னர் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது தண்டனைக்ககாலம் குறைக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் அறிவிக்கப்பட்டுள்ளது.