உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள அவுஸ்த்திரேலியா!
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய களம் இறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.
தென்ஆப்பிரிக்க அணி சார்பில் டேவிட் மில்லர் 101 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டாக் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதேபோல், டேவிட் வார்னர் 29 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 30 ஓட்டங்களையும் ஜோஷ் இங்கிலிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் டெப்ரைஷ் ஷம்சி மற்றும் ஜொராட் கோட்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதன்படி, எதிர்வரும் (19.11.2023) இடம்பெறவுள்ள 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.