ஆஸ்திரேலியாவில் முதல் ஓமிக்ரோன் மரணம் பதிவு!
ஆஸ்திரேலியாவில் Omicron வைரஸால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் முதல் மரணமாக இதனை உறுதி செய்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஓமிக்ரோனின் பாதிப்பு எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில், முதன்முறையாக Omicron பாதிப்புக்கு இன்று (27-12-2021) திங்கட்கிழமை உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதனை அதிகாரிகள் உறுதி செய்த போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன என கூறி புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்காமல் விட்டு விட்டனர்.
ஓமிக்ரோன் வைரஸ் தொற்றால் உயிரிழந்த நபருக்கு 80 வயது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், முதியோர் நல மையத்தில் தங்கியிருந்தபோது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.