ரஷ்ய அதிபருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆஸ்திரேலியாவின் அறிவிப்பு!
ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த விடயத்தை பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ரசுயாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ரஷ்ய அமைச்சர்கள், செல்வந்தர்கள் என மேலும் 16 பேருக்குப் பயணத் தடை விதிக்கவிருப்பதாக ஆல்பனீசி (Anthony Albanese) கூறினார்.
அதேவேளை ஆஸ்திரேலியா இதுவரை ரஷ்யர்கள் 843 பேருக்குத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனுக்கு மேலும் நூறு மில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கப்படும் என்றும் ஆல்பனீசி (Anthony Albanese) கூறினார்.
எனினும் அந்த மதிப்பு ஆஸ்திரேலிய டொலரா என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இதேவேளை ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆஸ்திரேலியா உக்ரைனுக்குக் கணிசமான உதவிகளைச் செய்து வருவதாக உகரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.