துருக்கி நிலநடுக்கத்தில் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
துருக்கி நிலநடுக்கத்தில் அவுஸ்திரேலிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. கன் பஹலி என்பவரே உயிரிழந்துள்ளார், அவரது உடலை பொறுப்பேற்பதற்காக குடும்பத்தினர் துருக்கி செல்லவுள்ளனர்.
சிரியாவின் தென்பகுதியில் எல்லையில் உள்ள அன்டக்யா நகரில் உள்ள தனது சகோதரி குடும்பத்தை பார்ப்பதற்காக சென்றவேளை இவர் நிலநடுக்கத்தில் சிக்குண்டுள்ளார். பகலியினதும் அவரது சகோதரியின் குடும்பத்தினதும் நிலை குறித்து அறிந்ததும் நான் துருக்கிக்கு உடனடியாக புறப்பட்டு சென்றேன் என அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்னால் ஏதாவது செய்ய முடியுமா என பார்ப்பதற்காக நான் துருக்கிக்கு புறப்பட்டு புதன்கிழமை துருக்கி வந்தேன் என உறவினர் தெரிவித்துள்ளார். அன்டக்யா தனது எல்லையை மூடியுள்ளது இதனால் அங்கு செல்லமுடியவில்லை ஆனால் குடும்பத்தினர் கன்பகலி உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர் எனவும் துருக்கி சென்றுள்ள உறவினர் குறிப்பிட்டுள்ளார்.
எனது உறவினர் ஒருவர் அம்புலன்ஸ் மூலம் அந்த நகரத்திற்கு பணம் கொடுத்து சென்றுள்ளார் நான் எப்படி எல்லையை கடந்து சென்று கன் பகலியின் உடலை பெறுவது என குழப்பத்தில் உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனது இதயத்தின் ஒரு பகுதி இறந்துவிட்டது என கன் பகலியின் உறவினர் ஒருவர் வருத்தத்துடன் அவரது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
பூகம்பத்தினால் தரைமட்டமாகியுள்ள அந்த வீட்டில் இருந்த எங்கள் உறவினரான பெண் ஒருவர் எப்படியோ உயிர் தப்பியுள்ளார் என இன்னமும் இடிந்து விழாமல் இருந்த சமையலறையை நோக்கி ஓடி தப்பியுள்ளார் என இல்யாஸ் பகலி தெரிவித்துள்ளார்.
வீட்டின் ஏனைய பகுதி முற்றாக இடிந்து விழுந்தது அவர் சமையலறையிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.