7 முறை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்... நடந்தது என்ன?
மிகுந்த சோர்வு மற்றும் மந்தமான பேச்சுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் குடிபோதையில் இருப்பதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தின் உண்மை நிலை என்னவென்றால் குறித்த பெண் ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் Auto-brewery syndrome என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
50 வயதான அவர் 7 முறை மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் குடிபோதையில் இருப்பதாக கூறி ஏழு முறையும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது குடலில் உள்ள பூஞ்சைகள் நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு நிலையாகும்.
இந்நிலையில், இதே போன்ற ஒரு நோயாள் பாதிக்கப்பட்ட நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.