கனடாவில் சராசரி வாடகைத் தொகை அதிகரிப்பு
கனடாவில் சராசரி வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் சராசரி வாடகைத் தொகை 2200 டொலர்கள் என பதிவாகியுள்ளது.
வீட்டுமனை தொடர்பான நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகைத் தொகை 5.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
பெருந்தொற்று காலப் பகுதியில் வாடகைத் தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஸ் கொலம்பியா மற்றும் ஒன்றாரியோ தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.
சஸ்கற்றுவானில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகைத் தொகை 22.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.