டொராண்டோ வீட்டு சந்தை தொடர்ந்து மந்தம்
2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முழுவதும் வீட்டு விலை மற்றும் விற்பனை மந்தம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக டொராண்டோ பிராந்திய வீட்டுமனை சபை, தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீட்டு விற்பனை 19.3 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில், சராசரி விற்பனை விலை 6.5 சதவீதம் குறைந்து, 9,73,289 டொலர்களாக பதிவாகியுள்ளது. செயலில் உள்ள வீட்டு பட்டியல்கள் 8.1 சதவீதம் உயர்ந்துள்ளன.

ஜனவரி மாதத்தில் மொத்தமாக 3,082 வீடுகள் மட்டுமே விற்பனையாகியுள்ள நிலையில், செயலில் உள்ள வீட்டு பட்டியல்கள் 17,975 ஆக உயர்ந்துள்ளன.
வீட்டு வழங்கல் அதிகரித்து வருவதால், 2026 முதல் பாதியில் சராசரி வீட்டு விலைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், நுகர்வோர் நம்பிக்கை மேம்பட்டால், ஆண்டின் இரண்டாம் பாதியில் விலைகள் நிலைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.