கனடாவின் ஒட்டாவா நகரின் வாடகை தொகையில் ஏற்பட்ட மாற்றம்
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கடந்த ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் குறைந்திருந்த வீட்டு வாடகை, பெப்ரவரி மாதத்தில் சற்று உயர்ந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வாடகை விலை குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Rentals.ca மற்றும் Urbanation இணைந்து வெளியிட்ட தேசிய வாடகை அறிக்கையின்படி (National Rent Report), ஒட்டாவாவில் பெப்ரவரி மாத சராசரி வாடகை 2,143 டொலராக பதிவாகியுள்ளது.

இது ஜனவரி மாதத்தில் இருந்த 2,107 டொலரை விட அதிகம் என்றாலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் நிலவிய வாடகையை விடக் குறைவுதான்.
ஒரு படுக்கையறை (1-Bedroom): சராசரியாக 1,960 டொலர்கள் (ஜனவரியை விட 15 டொலர்அதிகம்).
இரண்டு படுக்கையறைகள் (2-Bedroom): சராசரியாக 2,489 டொலர் (ஜனவரியை விட 31 டொலர் அதிகம்).
மூன்று படுக்கையறைகள் (3-Bedroom): சராசரியாக 2,726 டொலராக (2.5% உயர்வு). இருப்பினும், 2025 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ஒரு படுக்கையறை வீடுகளின் வாடகை 3.5 சதவீதமும், இரண்டு படுக்கையறை வீடுகளின் வாடகை 2.3 சதவீதமும் குறைந்துள்ளன.