ஆஸ்திரேலியாவில் பலரின் உயிரை காப்பாற்றியவருக்கு கிடைத்த கௌரவம்
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
அந்தக் கடற்கரையில் கடந்த மாதம் யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சிட்னி டெஸ்ட் போட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, முன்களப் பணியாளர்களுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து குண்டடிப்பட்ட அகமது அல் அகமதை நேரில் அழைத்து கவுரவிக்கப்பட்டார்.