ஆறுகிலோ எடையுடன் பிறந்த அதிசய குழந்தை!
அமெரிக்காவின் அலபாமாவில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் எடையைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் அந்த குழந்தையின் எடை 6 கிலோவை விட சற்று அதிகம் இருந்ததுதான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெண்ணின் பெயர் பமீலா மெய்ன். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், பர்மிங்காம் (Birmingham) பகுதியில் வசித்து வருகிறார்.
6 மாதக் குழந்தைக்கான ஆடை
இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பாரிஸ் ஹலோ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை அலபாமா கிராண்ட் வியூ மருத்துவ மையத்தில் சிசேரியன் மூலம் பிறந்த நிலையில் பிரசவ அறையில் இருந்த அனைவரும் குழந்தையின் எடையினை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து குழந்தையின் தாய் பமீலா கூறுகையில், சிசேரியன் மூலம் குழந்தையை எடுத்தபோது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களை பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் என்ன நடந்தது என்று முதலில் எனக்குப் புரியவில்லை . பிறக்கும் போது பாரிஸ் ஹலோ 13 பவுண்டுகள் மற்றும் 4 அவுன்ஸ் எடை கொண்டதாக இருந்தார்.
அதேசமயம், பிறக்கும் போது ஆரோக்கியமான குழந்தையின் சராசரி எடை 7 பவுண்டுகள் அல்லது 3.17 கிலோ ஆகும். மருத்துவமனையின் செவிலியர்கள் மீண்டும் மீண்டும் வந்து இந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்றும், பிறந்த 3 நாட்களில் குழந்தை மிகவும் பிரபலமடைந்து விட்டது என்றும் பமீலா நகைச்சுவையாக தெரிவித்தார்.
அதேவேளை , பிரசவ திகதிக்கு 16 நாட்களுக்கு முன்பே குழந்தை பிறந்துவிட்டது. இந்த பிறந்த குழந்தை, 6 மாதக் குழந்தைக்கான ஆடைகளை அணிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பாரிஸ் அதிக எடை இருந்தாலும், உலகின் அதிக எடை கொண்ட குழந்தை என்ற பெயரை பெறவில்லை. ஏனெனில் கின்னஸ் உலக சாதனைகளின்படி, 1955ஆம் ஆண்டு இத்தாலியில் சுமார் 10 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையே உலகின் அதிக எடையுள்ள குழந்தையாக கருதப்படுகிறது.